கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுக்கடைகளை காலை 8 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை மட்டும் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது போலீஸ் சூப்பிரெண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள் .அப்போது செட்டிபாளையம், மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், துடியலூர், கோவில்பாளையம், டாஸ்மாக் கடை அருகே வைத்தும் ,வீடுகளில் வைத்தும் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடமிருந்து 2100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் சோதனை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்











