கோவை : கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளமாநகர மற்றும் ஊரக்காவல்துறையினருக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நேற்று போலீசார் தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். அதன்படி, சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் 847 பேர், பி.ஆர்.எஸ் ஆயுதப்படை மைதானத்தில் 247 பேர், ஐஸ்வர்யா கல்யாண மண்டபத்தில் 252 பேர், பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில் 209 பேர் என மொத்தம் 1,557 போலீசார் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கிய வாக்குச்சீட்டு பயன்படுத்தி தங்களின் தபால் வாக்குகளை செலுத்தினர். மேலும், நேற்று 52.72 சதவீத ஊரக மற்றும் மாநகர போலீசார் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்















