கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த
மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த M. லோகேஷ் 35. சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த R. ரங்கசாமி 60. ஆகிய 2 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் *800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்