கோவை : வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை, ட்விட்டர், வாட்ஸாப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் சில நபர்கள் பதிவு மற்றும் ஆடியோ மூலமாக (26.09.22), ஆம் தேதி பொதுமக்கள் யாரும் கோவை செல்ல வேண்டாம் என்றும் கோயம்புத்தூரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். கோவை மாநகரில் 5000
ற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகரம் முழுக்க முழுக்க அமைதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. ஆகவே பொதுமக்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அவர்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என கோவை மாநகர காவல் துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்