கோவை: கோவை மாநகரம் அலுவலகத்தில், மாநகர காவல்துறையினரால் நேற்று முன்தினம், சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் திரு.ராஜா உசைன் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினரும் மாலையில் திரு.தசரதன், திரு.குணா மற்றும் இந்து அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
மேற்கண்ட அமைதிக் குழு கூட்டத்தில், கோவை மாநகரத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், சட்டத்தை மீறி,, பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும், அச்சுறுத்தும் வகையில், குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற இருதரப்பினரும் கோவை மாவட்டத்தின் காப்பதற்காக தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சட்டத்தை மீறி பொது மக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் அச்சுறுத்தும் வகையில், குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதி அளித்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்