கோவை : கோவை மாநகரம் B2 R.S புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில், தொடர்ந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, கோவை K.N.G புதூரை சேர்ந்த விஜய், கோவை இடையர் பாளையத்தை சேர்ந்த சூரியகுமார் மற்றும் கோவை, வேலாண்டிபாளையம் சேர்ந்த யுவராஜ் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் கோவை மாநகர மற்றும் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திருடிய,ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 5 இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்