கோவை: கோவை மாநகர காவல் துறை சார்பாக, கோவை மாநகரை விபத்தில்லா கோவையாக மாற்றும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்(Bus, Lorry,Tempo,Auto,Maxi-cab,Omini Bus, Good carriers, Parcel service), நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் இந்திய உணவு கழகம் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம்
கோவை மாநகர காவல்துறை சமுதாயக் கூடத்தில் இன்று 27.07.2021-ல் நடைபெற்றது. இதில் கோவை மாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு ஆணையை அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும் பின்பற்ற அறிவுறுத்தியும், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறாமல் வாகனங்களை இயக்கவும்,
கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களைத் தவிர மாநகரினுள் வருவதை தவிர்க்கவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விதிமுறைகளை மீறாமல் வாகனங்களை இயக்கவும், ஆட்டோ,டாக்ஸி, மேக்ஸி கேப், கூட்ஸ் கேரியர் வாகனங்கள் விதிமுறைகளை மீறாமல் அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றியும்,விபத்தினால் ஏற்படும் குடும்ப பாதிப்புகளைப் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகன விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கோவை மாநகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமரா பற்றியும் வாகன ஓட்டுநர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. #coimbatorecitypolice #Coimbatorecitytrafficpolice #பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் பற்றியும், கோவை மாநகர காவல்துறைக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தங்களுடைய தகவல்கள் இரகசியம் காக்கப்படும். #கோவை மாநகர காவல்துறையை தொடர்பு கொள்ள: ? 0422-2300970 மற்றும் ?9498181213 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும், 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும், மின்னஞ்சல் வழியாக தகவல் தெரிவிக்க விரும்புவோர்: controlroomcbecity@gmail.com என்ற முகவரியிலும், சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள Twitter : @policecbecity வழியாகவும் Facebook : @cbecitypoliceofficial மூலமும் காவல்துறைக்கு தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.