கோவை: கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பர். ஆனால், தற்போது கடமையை சரிவர செய்தால், அதற்கான பலன உன்னை தேடி வரும் என்பதற்கு ஏற்ப, கோவை மாநகர காவல்துறையினரின் கடின உழைப்புக்கு உரிய அங்கிகாரம் கிடைத்துள்ளது.
மாண்புமிகு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி அவர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் ஐபிஎஸ் அவர்களுக்கு கார்டு வெள்ளிப் பதக்கம் வழங்கினார்.
கொரானா தொற்றுநோய் காலத்தில் பொது மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு, அத்தியாவசிய உதவிகளை அளித்தல், மக்களைக் கண்டறிந்து உணவு, இடம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை திறப்பட செய்தனர். மேலும் புலம்பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, உள்ளிட்ட சேவைகளுக்காக ஸ்காட்ச் என்ற தனியார் அமைப்பினர், அகில இந்திய அளவில் நடத்திய டிஜிட்டல் மதிப்பீட்டில், பொதுமக்கள் கோவை மாநகர காவல் துறையினருக்கு தங்களது ஓட்டுகளை பதிவு செய்ததன் மூலம், அகில இந்திய அளவில் வெள்ளிப்பதக்கம் ஸ்காட்ச் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதினை அனைத்து கோவை மாநகர காவல்துறையினர் சார்பில் பெற்று கொண்ட, கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் ஐபிஎஸ் அவர்கள், இந்த விருதினை இரவு பகல் பாராது கடினமாக உழைத்த கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள். . !
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்