கோவை : கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் கதவு எண் 60 அழகப்ப செட்டியார் ரோடு காந்திபுரம் என்ற முகவரியில் குடியிருக்கும் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பவுனம்மாள் என்பவர் தனது வாரிசுகள் தன்னை கைவிட்ட நிலையில் வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
இவருக்கு அரசு கொடுத்த ரூபாய் ஆயிரத்தில் 800 ரூபாய்க்கு பொருள் வாங்கியது போக மீதி இருந்த 200 ரூபாயில் ஒரு வாரம் செலவு செய்து விட்டதாகவும் ,தற்போது சாப்பாட்டிற்கு கூட பணம் ஏதும் இல்லை என்றும் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக பல பேரிடம் உதவி கேட்டு கொண்டிருப்பதாக தகவல் தெரிந்து காவல் உதவி ஆய்வாளர் திரு செல்லமணி அவர்கள் மேற்படி வயதான பெண்மணியின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று ஐந்து கிலோ அரிசி ,ஒரு கிலோ பருப்பு ,50 கிராம் மஞ்சள் தூள், 50 கிராம் சாம்பார் தூள் ,50 கிராம் மல்லி தூள் ,50 கிராம் ரச தூள் ,50 கிராம் கடுகு, அரை கிலோ தக்காளி ,அரை கிலோ வெங்காயம், அரை கிலோ, உருளைக்கிழங்கு ,பிஸ்கட் மற்றும் ரொட்டி ஆகியவற்றை வழங்கி உதவி செய்துள்ளார்.
கோவையிலிருந்து,
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்