கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் covid-19 கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது . இதில் காவல் ஆய்வாளர்-1, உதவி ஆய்வாளர் -1 மற்றும் 5 காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டாலோ அல்லது பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமாக ஏதேனும் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 0422-2300999 என்ற எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அரசின் உத்தரவை மதித்து வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாய் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)