கோவை: கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் காவல் துறைக்குத் தெரிவிக்க போலீஸ் இ ஐ என்ற செயலி கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் திரு. சுமித் சரண், IPS அறிமுகப்படுத்தினார். போலீஸ் இ ஐ என்ற செயலி, போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயலி மூலம் பொதுமக்களே போக்குவரத்து விதிமுறைகளை, மீறி பயணம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து காவல் துறைக்கு அனுப்ப முடியும்.
அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலியில் பதிவாகும். இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் இந்நிலையில், மாநகரக் காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS இந்த செயலியை கோவையில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் போக்குவரத்து விதி மீறல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை போக்குவரத்து காவல்துறையினர், இதனை குறித்து விளம்பரப் பலகைகளை கோயம்புத்தூர் மாநகர் எங்கும் ஆங்காங்கே வைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போலீஸ் இ ஐ செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்,
Police E Eye
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்