கோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவையில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 4 ஆயிரத்து 467 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக 21 ஆயிரத்து 500 அரசுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, அந்தந்தந்த தொகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பெட்டிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்