கோவை : கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்டம் பி1 பஜார் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கொரானா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களின் நிர்வாகிகள், தங்க நகை பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழில் நிர்வாகிகள் ஊழியர்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்திற்கு கோவை மாநகர காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் தலைமை வகித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார். இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் திருமேனி அவர்கள் முன்னிலை வகித்தார். பி1 பஜார் காவல் ஆய்வாளர் திரு.இளங்கோ மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்