கோவை: அகில உலக அரிமா சங்கம் , கோவை கே.ஆர்.புரம் கிளையின் ஏற்பாட்டில் , கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகப் பணியாளர்களுக்கென , அலுவலக வளாகத்தில் தனி நூலகம் இன்று 23.12.2021 – ல் திறக்கப்பட்டது .
இதனை கோவை சரக டி.ஐ.ஜி திரு.எம்.எஸ்.முத்துசாமி , இ.கா.ப மற்றும் முன்னாள் அரிமா கவர்னர் மோகன்லால் திரு.கட்டாரியா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர் . விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திரு.லயன் N. சுப்ரமணியம் செய்தார் . சரக காவல் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக கண்காணிப்பாளர் திரு . R. சுந்தர்சிங் நன்றி கூறினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்