கோவை : கோவை செந்தில் வடிவேல் (43) s/o K.குமரன், கதவு எண் 39, முருகன் கோயில் வீதி, கே.ஆர்.புரம் இவர் மெக்கானிக்கல் டிசைன் இன்ஜினியர் வேலை செய்து வருவதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டதாகவும் அதன் மூலம் அதிக இலாபம் கிடைக்கும் என்ற நம்ப வைத்து ஒரு லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டதாகவும், எந்தவித முதலீடும் செய்தது பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் எனக்கு எவ்விதமான லாபமோ ஊக்கத் தொகையும் கிடைக்கவில்லை என்றும் அது தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் தன்னை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகாரின்படி இவ்வழக்கில் கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு. அருண் அவர்களின் தலைமையில் தீவிர நடவடிக்ககையில் இவ்வழக்கின் குற்றவாளியான நவீன் (எ) நவீன் குமார் (எ) முத்து பாலாஜி (33) கதவு எண் 161 நெல்சன் மாணிக்கம் வீதி, எம் ஜி எம் ஹாஸ்பிடல் பின்புறம், அமைந்தகரை, சென்னை என்பவர் BE படித்திருக்கிறார். மேற்படி நபர் குற்ற செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன் SIM cards 4, ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்