கோவை : கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண், அவர்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் கோவைப்புதூர் பரிபூர்ணா எஸ்டேட்டில் வசிக்கும் விக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரித்த போது அவர் தன்னுடைய சுய லாபத்துக்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி மோசடி செய்ததை கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இணையவெளி சட்ட குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு மேற்கொண்டு நபரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்