கோவை : கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் கிழக்கு வீதியில் வசிக்கும் சந்திரசேகர் என்பவரின் மகன் யுவராஜபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கோவையில் DS Banking Solution நடத்தி வரும் தினேஷ் என்பவர் தனக்கு இணைய வழி மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தன்னிடமிருந்து ஆதார்கார்டு, பான் கார்டு மற்றும் OPT விபரங்களை பெற்றுக்கொண்டு தன்னுடைய பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி லோன் பெற்ற தாக கொடுத்த புகார் மனுவினை பெற்று இணையவழி குற்றப்பிரிவு கா.நி குற்ற எண் 08/2023 u/s 419,420 IPC & 66C 66D of IT Act வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு காவல் ஆணையர் அவர்களின் வழிக்காட்டுதலின் பேரில் காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின் படி வழக்கின் குற்றவாளியான தினேஷ் என்பவரை (16.02.2023) காவல் ஆய்வாளர் திரு P.A. அருண், உதவி ஆய்வாளர் திரு H. முத்து, M. சிவராஜ பாண்டியன் மற்றும் சைபர் கிரைம் காவல் ஆளிநர்களுடன் குற்றவாளியை கைது செய்து மேலும் மோசடிக்கு பயன்படுத்திய Mobile phones 8 (Android mobiles), Sim card 26, Pan card-11, Aadhar-12, Voter ID – 1 Fake Rental agreement-1, ICICI tag bill-16, Customer base data details (சுமார் 6000 வாடிக்கையாளர் பற்றிய விபரங்கள்), Documents received from customers – 1 bunch, Intel icore5 CPU- 1, and other documents ஆகியவற்றை குற்றவாளிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்