கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் திரு .V பாலகிருஷ்ணன் IPS அவர்களின் உத்தரவின் பெயரில் கடந்த (17.10.2022), -ம் தேதி கோயம்புத்தூர் B.K. புதூரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் மகன் ஸ்ரீலஜ்குமார் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு PAN Card Update with Saving Bank Account என்று வந்த குறுஞ்செய்தியை நம்பி அதிலிருந்த linkயை கிளிக் செய்து அதில் தன்னுடைய SBI வங்கி கணக்கின் விவரங்களை பதிவு செய்த உடன் தனது வங்கி கணக்கில் இருந்து Rs.2,14,997.98/- பணம் திருடப்பட்டது அறிந்து நடவடிக்கை எடுக்க அளித்த புகாரின் பெயரில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண், தலைமையிலான போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்ததில் இழந்த மனுதாரர் இழந்த பணத்தில் ரூபாய் 1,90,000 மீட்கபட்டு மனுதாரரின் கணக்கில் சேர்க்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்