கோவை : கோவை மாவட்டம், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி தங்களுடைய குழந்தைகளுக்கு Govt Scholarship Sanction ஆகி உள்ளதாக கூறி அதனை பெறுவதற்கு பல்வேறு காரணங்களை கூறி QR Code ஐ அனுப்பி ஏமாற்றி நம்ப வைத்து ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவணங்களை தயார் செய்தும் அதை அவர்களுக்கு அனுப்பியும் நம்ப வைத்து ஏமாற்றி கூட்டு சதி செய்த குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி குற்றவாளிகள் அனைவரும் டெல்லியில் உள்ள Pithampura பகுதியில் தங்கி பொது மக்களிடம் எவ்வாறு ஏமாற்றி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி பயிற்சி பெற்று பின்னர் பொது மக்களை ஏமாற்றி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதே முறையில் தமிழ்நாட்டில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு வந்து அதே முறையில் ஏமாற்றி கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி மோசடியாக பணத்தைப் பெற்ற நபர்களை கண்டுபிடித்து ADGP CYBER Crime, கோவை மாநகர் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் தலைமையிடம் அவர்கள் வழிகாட்டுதலின்படி குற்றவாளிகள் ஐந்து பேரையும் கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்