கோவை: கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டிஐஜி திரு.நரேந்திர நாயர் பணியிடை மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் விவரம் பின்வருமாறு:
-
கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திரு.தேவராஜ், பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
-
பேரூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த திரு.சுகவனம், ஈரோடு பங்களாபுதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
ஈரோடு நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.மகாலிங்கம், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சட்ட ஒழுங்கு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
-
தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன், அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
காத்திருப்பு பட்டியலில் இருந்த திரு.திருமலைராஜன், நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் திரு.விஜயன், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.தங்கபாண்டியன், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்ட ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ,
-
பல்லடம் சட்ட ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ரமேஷ் கண்ணன், ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமதி.விஜயலட்சுமி, காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும்,
-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.செல்வராஜ், காரமடை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.ஜீவராஜ் மணிகண்டன், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருப்பூர்-ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி, சிறுமுகை இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கோவை மாவட்டம் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் திரு.சிவக்குமார், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.கோமதி, ஈரோடு மாவட்டம் சக்தி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.கனிமொழி, நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை போலீஸ் ஸ்டேசனுக்கு ம்,
-
சிவகங்கையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.அரங்கநாயகி, ஊட்டி ரூரல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும்,
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திரு.கண்ணன் ஈரோடு பவானி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருமதி.ஜெகதேவி, கோவை மாவட்ட ஏசிடியூ இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஈரோடு மாவட்டத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்த திரு.சிவகுமார், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்கவேண்டும் என்று டி ஐ ஜி நரேந்திர நாயர் உத்த்ரவிட்டுள்ளார்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்