கோவை : கோவை (10/12/2022)-ம் தேதி மாலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு.சைலேந்திரபாபு, அவர்கள் தலைமையில் குற்ற ஆய்வு கூட்டமும் அதை தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையில் மெச்சத் தகுந்த பணிகளை புரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சுதாகர், காவல்துறை துணைத்தலைவர் திரு முத்துசாமி கோவை மாநகர காவல் துணை ஆணையர்கள் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கோவை மாநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் கோவை மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் கூட்டத்தின் போது தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை ஆதாய கொலை கூட்டு கொள்ளை வழிப்பறி கன்னக்கலவு மற்றும் பாரித் திருட்டு ஆகிய வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கொடுங்குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்ததோடு 2021 மற்றும் 2022 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற கொலை ஆதாய கொலை கூட்டு கொள்ளை வழிப்பறி ஆகிய வழக்குகள் குறித்து ஒப்பிட்டு ஆய்வும் செய்து மேற்கொண்டு அனைத்து வழக்குகளிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநகர மண்டல சரகம் மற்றும் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து காவல்துறை இயக்குனர் அவர்கள் 2022 ஆம் ஆண்டில் கோவை மாநகரில் நடைபெற்ற முக்கிய குற்ற வழக்குகளில் துரிதமாகவும் மதி நுட்பத்துடனும் செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கு சிறப்பாக பணிபுரிந்து ரத்தினபுரி சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் கண்ணன் R.S புரம் காவல் உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் டி ஒன் ராமநாதபுரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் இ2 பீளமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.கணேஷ் குமார் சி2 சாய்பாபா காலனி சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தமிழரசு கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. வேலுமணி, ஆகியோர் தலைமையிலான ஆறு குழுக்களை சேர்ந்த மொத்தம் 30 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக காவல்துறை இயக்குனர் அவர்கள் கோவை மாநகர காவல் துறையின் புதுப்பிக்கப்பட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து பதிவேடுகளை பார்வையிட்ட சைபர் க்ரைம் குற்ற வழக்கு விபரங்களை குறித்து கேட்டறிந்தார் அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறைக்கு வருகை புரிந்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தகவல் பரிமாற்ற முறைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு விபரங்களை பார்வையிட்டு காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்