வீட்டில் 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
கோவை ஆக19 கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் சிவச்சந்திரன் தனது குழந்தைகளின் காதணி விழாவுக்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 9 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்துவடவள்ளி போலீசில் சிவச்சந்திரன் புகார் செய்தார். புகாரில் வேலைக்கார பெண் கலைச்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார் .அதன் பேரில் கலைச்செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். நகைமீட்கப்பட்டது.
பஸ்சில் – வீட்டில் திருடிய 2 பெண்கள் கைது
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ பஸ்சினுள் திருடிவிட்டார்கள்.இதுகுறித்து சரஸ்வதி உக்கடம் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 – வயது மாணவி கர்ப்பம். போக்சோவில் வாலிபர் கைது
கோவை ஆக 19 கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் காதலாக மாறியது .இதையடுத்து அந்த வாலிபர் மாணவியிடம் ஆசைவாரத்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது உடனே மனைவியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினர் .இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து கேட்டனர். அப்போது அவர் பரத்என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து கூறினார். இது குறித்து மாணவியின் பெற்ற துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரணயில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
லாட்ஜில் கோவை அரசு மருத்துவமனைபயிற்சி டாக்டர் விஷம் குடித்து தற்கொலை
ஆந்திர மாநிலம் நெல்லூர்ர், ஆதித்யாநகரை சேர்ந்தவர் .விஸ்வேஷ்வரராவ். இவரது மகன்பிரவீன் அன்ன தாதா ( வயது 33)இவர் ஜாம்ஷெட்பூரில் எம்,பி,பி,எஸ். படித்தார். இதை யடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் கோவை அரசுகலைக்கல்லூரி ரோடு கோபாலபுரத்தில் உள்ள உள்ளஒரு தனியார் லாட்ஜில் அரை எடுத்து தங்கி இருந்தார்.
அவர் கடந்த ஒரு வாரமாக மருத்துவக் கல்லூரிக்கு செல்லவில்லை. தனது செல்போனையும் எடுத்துப் பேசவில்லை .இதற்கு இடையில் பிரவீன் அன்ன தாதரவின் பெற்றோர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது .இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன் அன்னதாதாவின் தந்தை விஸ்வேஸ்வரராவ் நேற்று கோவை வந்தார். அவர் கோவையில் மகன் தங்கி இருந்த லாட்ஜ்க்கு சென்று அறையை திறந்துபார்த்தபோது பிரவீன் அன்னதாதாவிஷம் குடித்து பிணமாக கிடந்தார்.மேலும் அவரது கழுத்தில் கேபிள் ஒயரால் இறுக்கிய தடையமும் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிரவீன் அன்ன தாதாவின் உடலைகைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்”இதுகுறித்து முதுநிலை பயிற்சி டாக்டரின் தந்தை விஸ்வேஷ்வரராவ் போலீசாரிடம் கூறுகையில் பிரவீன் அன்னதாதா தேர்வு எழுத மருத்துவ துறையின் சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆவதாக 2 நாட்களுக்கு முன்தன்னிடம் கூறினார். இது பற்றி போலீசார் விசாரித்த போது பிரவீன் அன்னதாதா படித்த ஜாம்ஷெட்பூர் மருத்துவ கல்லூரியிலிருந்து எம்.ஜி.ஆர் .மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழ் வர தாமதமானதால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்காலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து மருத்துவக் கல்லூரி டாக்டர் .நிர்மலா கூறியதாவது:- பிரவீன் அன்னதாதா கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம். என்றார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை பயிற்சிடாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது”.