கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்கியும், தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பற்றி எடுத்துக்கூறி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியும், மேலும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.