கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன் I.P.S அவர்களின் தலைமையில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திருமதி.R.சுகாசினி அவர்கள், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஆறுமுகம் அவர்கள், மற்றும் காவல் ஆய்வாளர் திரு.PA.அருண் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மூலம் நவீன இணையவெளி குற்றங்கள் மற்றும் எதிர்கால இணைய வழி குற்ற அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் நவீன இணையவெளி பண மோசடி குற்றங்கள், அதன் வகைகள், அதிலிருந்து தற்காத்தும் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் சமூக வலைதளத்தை கவனமாக கையாளும் வழிமுறைகளும், Cryptocurrency Bitcoin தொடர்பான விழிப்புணர்வுகள், பாதுகாப்பான பண பரிமாற்றத்திற்கான வழிமுறைகள் மற்றும் Online பண பரிமாற்றத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் கோவை மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் என மொத்தம் சுமார் 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்