கோவை : கோவை மாநகர காவல் ஆணையராக திரு. கண்ணன், ஐ.பி.எஸ்., அவர்கள் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது கோவை மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநகரின் தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி காவல்துறையினர் நேர்மையுடனும், துரிதமாகவும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்















