கோவை : கோவை மாநகர் e – 1 சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் (17/5/2023),ஆம் தேதி ஸ்ரீநிதி என்ற (12) வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டி அடிப்படையில் அவரது புகைப்படத்தை பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். மேற்படி சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் அச்சிறுமியை (18/5/2023), ஆம் தேதி பொள்ளாச்சியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோர் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில் மேற்படி சிறுமியின் எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாக நீக்கிக் கொள்ளுமாறு மேலும் இனிவரும் காலங்களில் யாரும் இச்சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் எனவும் கோவை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்