கோவை : கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பாண்டி இவரது மகள் தாரணி வயது 19 இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ 3 – ஆம் ஆண்டு படித்து வருகிறார் இவர் பிளஸ் 2 படிக்கும் போதில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது அவர்கள் அறிவுரை வழங்கினார்கள் இருந்தபோதிலும் அவர்கள் காதல் தொடர்ந்து நீடித்தது இந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி தாரணி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் இதுகுறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் தாரணி மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகரைச் சார்ந்த தனது காதலனுடன் தலைமறைவாகி விட்டதாக கூறினார்கள் இவர்களை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்