கோவை : பெண் எஸ்பிக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜஸ்தாசை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், கோவையில் நேற்று ஸ்டேட் வங்கி ரோட்டிலுள்ள கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து அகில இந்திய துணை செயலாளர் சுதா சுந்தரராமன் மாநில தலைவர் வாலண்டினா மாநில பொதுச்செயலாளர் சுகந்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பிரமிளா அமிர்தம் ராதிகா உட்பட மாதர் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான பெண்கள் எஸ்பி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் – இதனால் போலீசாருக்கும் மாத சங்கத்தினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் எஸ்பி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்திய 51 பெண்களை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்