கோவை : கோவை மாநகர காவல் துறை குமரகுரு இன்ஸ்டியூசன் மற்றும் ஸ்பார்கிங் ஸ்டார்ஸ் இணைந்து போதைப் பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுணர்வு கிரிக்கெட் திருவிழா (CCP -CUP SEASON – 2 ) கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் 16 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 32 அணிகளும் பங்கேற்றன. மேற்படி கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா (14/6/2023), ஆம் தேதி PSG மருத்துவக் கல்லூரி மைதானம் A – யில் கோவை காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர்கள் திரு.சடகோபன் ரமேஷ் மற்றும் திரு.சாய் சுதர்சன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இதில் காவல்துறை ஆணையர் வடக்கு மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேற்படி கிரிக்கெட் போட்டியின் காவல்துறை அணியில் முதல் பரிசை காவல் ஆணையர் அணியும் இரண்டாம் பரிசை காவல் துறை ஆணையர் வடக்கு அணியும் பெற்றன. பொதுமக்கள் அணியில் ABT மாருதி அணி முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம், பியூச்சர் ஸ்டார்ஸ் அணி இரண்டாவது பரிசாக 15,000 இம்பல்ஸ் அணி மூன்றாம் பரிசாக 7000 GCTஅணி நான்காவது பரிசாக 3000 பெற்றன. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் காப்பவள் அணி முதல் பரிசாக 6000 ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி இரண்டாம் பரிசாக 4000 பெற்றனர். மேற்படி வெற்றியாளர்களுக்கு காவல்துறை ஆணையர் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கியும் போதை பொருட்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் உரையாற்றினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்