கோவை : கோவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்கள் ஆகியோர்களது உத்தரவின்படி வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவைகளின் மீது சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தி முறையான தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்று கோவை மாநகரில் உள்ள அனைத்து சட்டம் ஒழுங்கு புலனாய்வு பிரிவு காவல் நிலையங்கள் மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் தனி பிரிவுகளில் பொதுமக்கள் மனுக்கள் மீதான குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இக்குறை தீர்ப்பு முகாமில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட 254 மனுக்களில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் அங்கே இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். காவல் துறையின் விசாரணையின் போது 131 புகார்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரராக இரு தரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டார்கள் 56 மனுக்களில் முறையாக விசாரிக்கப்பட்டு குறைகளுக்கு ஏற்ப இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டவாறு தீர்வு காணப்பட்டது. 10 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 27 மனுக்களை ஆவணங்களை ஆச்சரியப்படுத்துவது தொடர்பாக விசாரணை நிலவையில் உள்ளது. 30 மனுக்களை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் காவல்துறை விசாரணை இருந்தது. நீதிமன்றம் சென்று தீர்வு கண்டு கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்து அம்ணுக்கள் மீது தக்க நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்