கோவை : கோவை யை அடுத்த ஆலாந்துறை பக்கமுள்ள இக்கரை போளுவாம் பட்டியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 69) இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஆவார் நேற்று இரவில் இவரது வீட்டில் ஏதோ சத்தம் கேட்டது . உடனே எழுந்து பார்த்தார் அப்போது ஒரு ஆசாமி ஓடுவது தெரியவந்தது வீட்டினுள் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது அங்கிருந்த 2 பவுன் தங்க நகைகளை காணவில்லை ஜன்னல் கதவுகளை உடைத்து அது வழியாக உள்ளே புகுந்து யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்று விட்டனர் இதுகுறித்து ஆலந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/gokul.png)
A. கோகுல்