கோவை : திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமஜெயம் இவரது மகன் நவீன் குமார் (வயது 22) இவர் கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரிகள் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார் கொரோனா காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தார் இவருக்கு இரண்டாம் ஆண்டில் அரியர்ஸ் விழுந்தது இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் அரியர்ஸ் எழுதுவதற்காக கல்லூரிக்கு விடுதிக்கு கடந்த 4 தினங்களுக்கு முன்பு வந்தார் அவரது தாயாரையும் . அழைத்து வந்தார் நேற்று அவரது தாயார் சொந்த ஊருக்கு சென்று விட்டார் அங்கு சென்றதும் தன் மகனுக்கு போன் செய்தார் அவர் எடுத்து பேசவில்லை இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் கல்லூரியில் உள்ள ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தார் ஆசிரியர்கள் விடுதியில் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது நவீன் குமார் தூக்கில் பிணமாக தொங்கிய தெரியவந்தது இதுகுறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் நவீன் குமார் அரியர்ஸ்விழுந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்