கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு பகுதி வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் நேற்று அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது டிப்பர் லாரியில் மணல் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து மதுரை வாடிப்பட்டி சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் ( வயது 40) பெரியநாயக்கன்பாளையம் அண்ணா நகரை சேர்ந்த ஜே. சி .பி டிரைவர் நந்தகுமார் (வயது 30) ஆகியோரை தேடி வருகிறார்கள் .டிப்பர் லாரியும் அரை யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.