கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பாப்பம்பட்டி பிரிவில் சூலூர் எஸ்ஐ ராஜ்குமார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் அவரிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையொட்டி அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் அவரது பெயர் சரவணன் வயது 23 அங்குள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர இவரிடம் இருந்து கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப் பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்