கோவை : கோவை பக்கம் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவஞானம் வயது 50 அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி மீராபாய் 50 நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் ஒரு திருமண விழாவுக்கு செல்வதற்காக பைக்கில் அத்திப்பாளையம் துடியலூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர் அப்போது 2 பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் தம்பதிகளை வழிமறித்து மிரட்டினார்கள் பின்னர் மீராபாய் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது இதுகுறித்து கோவில் பாளையம் போலீசில் மீராபாய் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தார் நேற்று கொள்ளையர்4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இந்தக் கொள்ளையை நடத்திய கொடைக்கானல் செய்யது இப்ராஹிம் வயது 27 திண்டுக்கல் ரபீக் ராஜா வயது 23 ரியாஸ் வயது 21 பரமத்தி வேலூர் புவனேஸ்வரன் வயது 31 ஆகியோர் நண்பர்கள் என்றும் இவர்கள் மீது கொலை கொள்ளை வழிப்பறி போன்ற பல வழக்குகள் உள்ளன இவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நண்பர்கள் ஆனார்கள் இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த புவனேஸ்வரன் கோவை பக்கம் உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கியிருந்தார் இவன்தான் தனது நண்பர்களை கொள்ளை நடத்த கோவைக்கு வருமாறு அழைத்துள்ளான். என்பது தெரியவந்தது இவர்களிடமிருந்து 2 பைக் 5 பவுன் தங்க சங்கிலி பறிமுதல்செய்யப்பட்டது கொள்ளையர்கள் 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்