கோவை : கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள லிங்கனூர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்து குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று மாலை ரகசியதகவல் வந்தது. சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு 144 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை பதுக்கி வைத்திருந்த லாலி ரோடு மில்டன் ராஜா வயது 34 வேடப்பட்டி முருக கனி வயது 39 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தத் தோட்டத்தில் மாவு அரைக்கும் தொழில் செய்யப்போவதாக கூறி, நேற்றுதான் மாதம் 8 ஆயிரம் ரூபாய்க்குவாடகைக்கு எடுத்துள்ளனர். இங்கிருந்த 144 மூட்டை ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன் படுத்தபட்ட 2 பைக்குகளும் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு கோவை உணவு பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்