கோவை: கோவை நீலம்பூர் பக்கம் உள்ள முதலி பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். ரியல் எஸ்டேட் தொழிலும் ஒர்க்ஷாப்பும் நடத்தி வருகிறார்.இவரது மனைவி நெசிலா.இவர்கள் வீட்டுக்கு இவரது கணவரின் செல்போனுக்குகடந்த 20-ந்தேதி காலை 11 மணிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தான் மண் தோண்டும் கூலி வேலை செய்து வருவதாகவும், வேலை செய்த போது தங்க கட்டி ஒன்று கிடைத்ததாகவும், அதன் விலைசுமார் 15 லட்சம் இருக்கும்.
நீங்கள் ரூ 10 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும். நான் கொடுத்து விடுவேன் என்று சொல்லி கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே வரும்படி கூறினார் .நானும், என் கணவரும் ரு 10 லட்சம் பணத்துடன்புறப்பட்டு இரவு 9 மணிக்கு கிணத்துக்கடவு புதிய பஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள் எங்களை பார்த்து அருகில் வரச் சொன்னார்கள்.
நாங்கள் அருகில் சென்றதும் அதில் ஒருவர் சுமார் 50 வயது முதியவர் தங்கள் அருகில் வந்து தங்க நிறத்தில் இருந்த ஒரு கட்டியைகொடுத்து ரூ 10 லட்சம் கேட்டதாகவும்,தங்களிடம் ரூ 5 லட்சம் மட்டும் உள்ளது தங்கக்கட்டி தாருங்கள். பிறகு 5 லட்சம் தருகிறோம் என்று கூறினோம்.. சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த 2 நபர்கள்தங்கத்தை கொடுத்து விட்டு இருக்கிற பணத்தை வாங்கிவிட்டு வா.அப்புறம் பார்த்துக்கலாம் என்று கூறினார்,
அந்த நபர் எங்களிடம் தங்கக்கட்டி கொடுத்துவிட்டு வேகமாக சென்று விட்டார். நாங்கள் வீட்டில் சென்று பார்த்த போது மேற்படி தங்கம் அல்லாத சுமார் 2 கிலோ தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது. இதுகுறித்துகிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அருள்பிரகாஷ் போலீஸ்காரர்கள் திரு.வினோத் மெர்குரி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். குற்றவாளி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து இது தொடர்பாக மாக்கி னாம்பட்டி பட்டி ரோடு ,மின் நகர், நிஜாம் என்ற சின்னப்பா 44. சூளேஸ்வரன்பட்டி உசேன் அலி 33. ஆனைமலை புது காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 53. ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மோசடி தொழிலில் இறங்கியது விசாரணையில் தெரியவந்தது.
