கோவை : கோவை நவம்பர் 16 கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 34 டிரைவர் இவர் நேற்று கலிக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த கோகுல் வயது 20 தீபக் வயது 19 பவேஷ் வயது 21 ராஜேஷ் வயது 21 ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது மோதல் முற்றியதால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து சிலம்பரசனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது இதில் சிலம்பரசன் படுகாயமடைந்தார் இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் சேர்க்கப்பட்டார் இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்தனர் மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள் இவர்கள் மீது கொலை முயற்சி தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்