கோவை : கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன் பாளையத்தில ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக சூலூர் போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது எஸ் ஐ ராதாகிருஷ்ணன் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார் அப்போது சூதாடியதாக மலுமிச்சம்பட்டி ஜெயராஜ் 24 வெள்ளலூர் மதன் 23 உக்கடம் சமீர்கான் 24 மதுக்கரை சரவணகுமார் 33 பீடம்பள்ளி பழனிச்சாமி 55 உப்பிலிபாளையம் அருண்குமார் 34 கண்ணம்பாளையம் கணேஷ் 21 வெள்ளலூர் கோபால் 22 மலுமிச்சம்பட்டி பத்மநாபன்41 ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இவரிடமிருந்து 5 சேவல்கள் ரூ900 மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்