கோவை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநாதன் இவரது மகன் லாலன் குமார் ( வயது 25) இவர் சூலூர் பட்டணத்தில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தார் நேற்று இவர் ஒரு சரக்கு ஆட்டோவில் கஞ்சா ஏற்றிக்கொண்டு பட்டணம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அவரது ஆட்டோவை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார். அதில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது .இதையடுத்து அவர் பேர் கைது செய்யப்பட்டார் கஞ்சாவும் சரக்கு ஆட்டோவும் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்