கோவை: கோவை பக்கம் உள்ள மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சுல்தானா பர்வீன் 20. இவர் கோவை அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ. (கட்டிடக்கலை ) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் அதே பகுதியை சேர்ந்த யூசுப் என்பவர் இவர் மீது ஒருதலைக்காதல் வைத்திருந்தார்.
இவரது காதலை சுல்தானா பர்வீன் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் ஆத்திரமடைந்த யூசுப் சாதிக் மற்றும் ஒரு பெண்ணும் சேர்ந்து சுல்தானா பர்வீன் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததார்களாம். இது குறித்து மாணவி சுல்தானா பர்வீன் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் யூசுப்சாதிக் உட்பட 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
