கோயம்புத்தூர் : கோவை அருகே கடையின் பூட்டை உடைத்து 47 பேட்டரிகள் திருடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை பக்கம் உள்ள அரசூர் அன்ன மார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 37 இவர் அங்குள்ள நீலாம்பூர் அவினாசி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 47 பேட்டரி களை யாரோ திருடிச் சென்று விட்டனர் இதுகுறித்து தங்கராஜ் சூலூர் போலீசில் புகார் செய்து உள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்