கோவை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள கல்லாங்காடு புதூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் ( வயது 51) இவர் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சாலைப்புதூரில்இரும்பு கடை நடத்தி வருகிறார். 11ஆம் தேதி இரவு இவரது கடைக்கு முன் தனக்கு சொந்தமாக சரக்கு ஏற்றும்ஆட்டோ நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ 3லட்சம் இருக்கும். இதுகுறித்து செல்வேந்திரன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்