கோவை : கோவை சூலூர் பக்கம் உள்ள பள்ள பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது எஸ்ஐ ராதாகிருஷ்ணன் அங்கு சோதனை நடத்தினர் அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக ஒத்தக்கால் மண்டபம் சரவணகுமார் 26 தஞ்சாவூர் ஜீவன் குமார் 25 புதுக்கோட்டை அகிலேஷ் 27 ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர் செய்யப்பட்டனர் இவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது இதேபோல மேட்டுப்பாளையம் டாங்க் மேடுபஸ் ஸ்டாப்பில் கஞ்சா விற்றதாக மகாதேவபுரம் யாசர் அராபத் 26 கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது அன்னூர் மாணிக்கம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்றதாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கங்கன் பிகாரி தாஸ் வயது 40 கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்