கோயம்புத்தூர் : கோவை சுற்று வட்டாரங்களில் மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவி அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர் நேற்று மருதமலை அருகே ரோட்டில் நடந்து வந்த காவலாளி முகமது நிவாஸ் வயது 65 என்பவரை காட்டு யானை மிதித்து கொன்றது இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆலாந்துறை பக்கம் உள்ள போளுவாம்பட்டி என்ற ஊருக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்து தெருத்தெருவாக வலம் வந்தது , அங்கிருந்த மரம் செடி கொடிகளை சேதப்படுத்தியது 3 மணி நேரம் இந்த ஒற்றை யானை அட்டகாசம் செய்தது . இந்த நேரத்தில் மக்கள் யாரும் வெளியே வராததால் உயிர்ப்பலி ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மரண பயத்துடன் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அவர்கள் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் துரத்தினர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்