கோவை : கோவை நவம்பர் 12 கோவை கரும்புக்கடை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் திலீப் குமார் வயது 26 இவருக்கு மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நேற்று இவர் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து தாயார் நாகலட்சுமி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் இதேபோல கோவை பக்கம் உள்ள கணபதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 54 குடிப்பழக்கம் உடையவர் நேற்று இவர் மதுவில் சாணி பவுடரை கலக்கி குடித்து தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து இவரது மனைவி தனபாக்கியம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்