கோவை : சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானம் இன்று அதிகாலை 4மணி அளவில் கோவை வந்தது பின்னர் இங்கிருந்து 5 மணிக்கு சார்ஜா புறப்படுவதற்கு தயாராக இருந்தது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி பக்கம் உள்ள துவாக்குடி சேர்ந்த நாகரத்தினம் என்பவர் கோவை விமான நிலையம் வந்தார் அவர் வைத்திருந்த சூட்கேசை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர் அதில் 1.2 கிலோ போதைப்பொருள் (மெதம் பிடமைன் ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பாக நாகரத்தினத்திடம் விசாரணை செய்தபோது இந்த விமானத்தில் சார்ஜா செல்வதற்கு வந்தபோது கோவை விமான நிலையத்திற்கு முன்வைத்து என் நண்பர் ஒருவர் இந்த சூட்கேசை கொண்டு செல்லுங்கள் பின்னால் நான் வருகிறேன் என்று கூறி என்னிடம் கொடுத்தார் என்று கூறினார் ஆனால் சூட் கேஸ் கொடுத்த நபர் வரவில்லை. பிடிபட்ட நாகரத்தினம் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் இவர் வைத்திருந்த போதை பொருள் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ ஒரு கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது இந்த போதைப் பொருள் கடத்தி வந்தவர் யார்? இவரா ? இவரது நண்பரா ? இதற்குப் பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்பது குறித்து நாகரத்தினத்திடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடித்து வருகிறார்கள்.