கோவை: கோவை இருகூர் ரோட்டில் உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கவேல் 26 இவரது கடைமுன் நிறுத்தி இருந்த அவரது காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி கேமரா மூலம் ஆய்வு செய்து பீளமேடு பி.கே.டி நகரைச் சேர்ந்த திரு மூர்த்தி 32 என்பவரை நேற்று கைது செய்தனர்.
இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்














