கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலமுருகன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது சுட்டுப்பிடிப்பு சம்பவம் நடைபெற்றது. சூலூர் அருகே அவரை கைது செய்ய முயன்றபோது, பாலமுருகன் காவல் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு எஸ்.ஐ.யின் கையை ஆயுதத்தால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் பாலமுருகனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாலமுருகனின் வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்
















