கோவை : கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது இதில் ரூ 2. 38கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது போலீஸ் ஹவுசிங் கார்ப்போரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது கோவை கமிஷனர் திரு. சுமித் சரண் கலந்துகொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார் . இதில் துணை போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் உதவி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்